.comment-body-author { background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigoaGcFsOypOKKFoXxa5IcfRpx_jyyuKy8BSR7YCNsv4lODy_J_EsC4FqTDpw2BPix9DNwLb2HmRAdKTDNT5uv7WfkFyK769OOU6PUwLIuGx8u4jjtR1hI4-how3Y2GOhYBEAUmFRbxYg/h80/admin.gif") no-repeat scroll right bottom #BFE3FE; border: 1px solid #80C8FE; -moz-border-radius: 6px;-webkit-border-radius: 6px; padding:5px 35px 3px 3px; }

Grab This Gadget »

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன்

பால் பாயசம்



பால் பாயசம்

தேவையானப்பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்
அரிசி - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 8
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:
பாயசம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேஸை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு அணைத்து விடவும்.

குக்கரைத் திறந்து கேஸை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரிப் பருப்பை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.

ஏலக்காயைப் பொடி செய்து போட்டு குங்குமப்பூவை போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

முந்திரிப் பருப்பை சீவிப் போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப் பரிமாறவும்.

Description: பால் பாயசம், Rating: 4.5, Reviewer: Admin, ItemReviewed: பால் பாயசம்